வசியம் என்றால் என்ன?
வசிய முறை தானாக உருவாகியதல்ல, இது முன்னர் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்டது. தவத்தின் பலனாலும் தகுந்த மூலிகைகளின் உதவியாலும் வசியம் செய்யும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்தனர். சித்தர்களுக்கு பின் வந்தவர்களும் சித்தர்கள் கண்டறிந்த வசிய முறைகளை பயன்படுத்தி வசியத்தினை தொடர்ச்சியாக செய்து வந்தனர். இது பற்றி ‘மூலிகை மாயாஜால திரட்டு’ என்னும் நூலில் விரிவாக உள்ளது.
தான் விரும்பிய அல்லது விரும்பாத ஒருவரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுதான் வசியம். இது ராஜவசியம், லோகவசியம், சர்வவசியம், மிருகவசியம், ஆண்பெண் வசியம் என தேவைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் செய்கின்றனர்.
வசியம் செய்வதற்கு மிகவும் பிரபல்யமான இடம் கேரளா ஆகும். இந்தியாவில் கேரளா என்னும் இடத்தில் அதிகளவிலான வசியம் செய்து கொடுக்க கூடிய இடங்கள் உள்ளன. இங்கு சிறிய சிறிய விடயங்கள் தொடங்கி எல்லா விடயங்களுக்கும் வசிய முறையை பயன்படுத்துகின்றனர்.
சித்தர்களால் செய்யப்பட்ட 8 சித்துக்கள்.
- உச்சாடனம் – மூலிகைகளால் மந்திரித்து எதிரிகள், மிருகங்கள், பேய், பிசாசுகள், உடலில் ஏறிய விஷங்களை விரட்டும் முறை உச்சாடனம்.
- ஆகர்ஷணம் – தேவதைகள், துர்தேவதைகள், இறந்து போன ஆன்மாக்கள் போன்றவற்றை அழைத்துப் பேசுவது.
- பேதனம் – ஒன்றை வேறொன்றாக மாற்றிவிடுவது. மனிதர்களை, மிருகங்களைப் பேதலிக்கச் செய்வது.
- மோகனம் – மயங்கச்செய்வது.
- வசியம் – மனிதர்களை, விலங்குகளை வசியம் செய்வது.
- வித்துவேஷணம் – விருப்பமில்லாமல் செய்வது அல்லது வெறுப்பை உண்டாக்குவது.
- மாரணம் – எதிரிகளை மிரட்டி கொல்வது.
- தம்பனம் – செயல்களைக் கட்டுவது. (வாயைக்கட்டுவது).
மேலும், மேற்குறிப்பிட்ட 8 சித்துக்களும் 8 வகையான மூலிகைகள் பயன் படுத்தப்பட்டது. இந்த எட்டு சித்துகளுக்கும் பேய் மிரட்டி, மான் செவிகள்ளி, தேள்கொடுக்கி, கொட்டைக்கரந்தை, வெள்ளைக் கண்டங்கத்திரி, நத்தைச்சூரி, பிரமதண்டு, புல்லுருவி, ஏறண்டம், வேளை, உள்ளொட்டி, புறவொட்டி, சிறு முன்னை, அழுகண்ணி, தொழுகண்ணி போன்ற 64 மூலிகைகள் தேவைப்பட்டன என்று சொல்லப்படுகிறது. சூரியன் தோன்றி முதல் நிழல் விழுவதற்கு முன்னர் அதே சமயம் இருள் இல்லாமல் இருக்கும் வேளையில்தான் மூலிகைகளைப் பறிக்க வேண்டும். ஆறு மணிக்கு சூரிய உதயம் என்றால் 5:50 இருந்து 6 மணி வரைதான் மூலிகைகளைப் பறிக்க வேண்டும். அதுவும் பறிக்கவேண்டிய மூலிகைக்கு மஞ்சள் நிற நூல் கொண்டு காப்புக் கட்டி, வெற்றிலை, பாக்கு வைத்து தீபம் காட்டி வணங்க வேண்டும். அந்தந்த மூலிகைக்கு உரிய தேவர்களை வணங்கிவிட்டு ‘ஓம் மூலி, உயிர் மூலி, உன்னுயிர் மூலி’ என்று 16 முறை சொல்லும் கால அளவுக்குள் பறிக்க வேண்டும்.
வசியத்தின் வகைகள் மற்றும் பலன்கள்
- ஜன வசியம்: நாம் பழகும் அல்லது பார்க்கும் மக்களை தன் வசப்படுத்தி தம்மை அவர்களுக்கு தலைவராகிக் கொள்ளவதும் மற்றவர்களை தம்மை மதிக்க வைப்பதும் தன் சொல்லுக்கு அடங்கி நடக்க வைப்பதும் ஜன வசியமாகும்.
- ராஜ வசியம்: மன்னர்கள் மற்றும் அரச பதவியில் இருப்பவர்கள் அல்லது அரச பதிவிற்கு ஆசை படுபவர்கள் பெரிய பதவியில் இருப்பவர்களை சந்திக்கும் போது அவர்களை தன் வசப்படுத்தி தன் தேவையை பூர்த்தி செய்வதற்காக இவ்வசியத்தினை பயன் படுத்தலாம். இந்த வசியத்தின் மூலமாக அரசு அதிகாரிகள் வசியமாவார்கள்.
- புருஷ வசியம்: இவ்வசியத்தினை ஆண் வசியம் என்றும் கூறுவர். ஒரு பெண் தான் விரும்பும் ஆணை மணப்பதற்காக அல்லது ஒரு ஆணை கவர வைப்பதற்காக பயன்படுத்தும் வசியமாகும். இவ்வசியத்தினை பயன்படுத்தி விட்டால் அந்த ஆண் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணிற்கு மட்டும் சொந்தமான ஆணாக வாழ்வான். வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ்வான்.
- ஸ்திரீ வசியம்: ஆண் தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காகவும் வாழ் நாள் முழுவதும் அப்பெண் தன்னுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் அந்த பெண்ணை வசியப்படுத்துவது ஸ்தீரி வசியமாகும்.
- மிருக வசியம்: இது மிருகங்களை வசியப்படுத்தி கட்டுப்படுத்தும் வசிய முறை ஆகும். காட்டுக்கு செல்ல நேர்ந்தாலோ அல்லது விலங்குகள் மூலம் ஆபத்து வர நேர்ந்தாலோ இவ்வசிய முறை மூலன் எம்மை பாதுகாத்து கொள்ள முடியும். சகல மிருகமும் வசிய மாகும் வசிய ராட்சை முறை மற்றும் வசிய மூலிகை அஞ்சணம் முறையில் வங்கி பயன் பெறலாம்.
- தேவ வசியம்: இத்தேவ வசியமானது தேவதைகள் தெய்வங்களை வசப்படுத்தி அவைகளின் நன்மைகளை பெறுவதற்கு உதவுகிறது. ஆரம்ப மந்திரவாதிகள் மந்திரம் பழகுவர்கள் குடும்ப ஆண்மிக நண்பர்களுக்கும் உதவும் முறை இதுவாகும். கவசமும், சர்வ தேவதைகளும் சித்திக்கும், சிந்தையும் செயலும் ஒரே நேர் கோடியில் அமையும் ராட்ஷசை மற்றும் அஞ்சனா மை முறைகளில் வங்கி பயன் பெறலாம்.
- சத்துரு வசியம்: நம்மை சுற்றி உருவாகும் எதிரிகள் விரோதிகளை நம் வசப்படுத்தி அவர்களை பணிய வைத்து நமது விருப்பங்களை நிறைவேற்றுவதே சத்ரு வசியத்தின் நோக்கமாகும். நம்மை எதிர்த்து பேசும் தனி நபரோ அல்லது குழுவாக இருந்தாலும் அவைகளை இந்த வசியத்தின் மூலம் நம் வசப்படுத்த முடியும்.
- லோக வசியம்: இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களையும் தன் வசப்படுத்தி நம் காரியங்களை செய்ய உதவுவது இவ்வசியம் ஆகும். சர்வ வசியம், லோக வசியம் ஒரே பவனை கொண்டது சர்வ வசியம் செய்வர்க்கு தேவைகள் இல்லாதவற்றை வெளியேறும் ஆனால் லோக வசியம் செய்வர்க்கு எல்ல காரியமும், வேலை விசயங்களும் உள்ளடங்கும் உள்ளடங்கும் சித்தர் முறை.
- மோஹினி வசியம் : ஆண் பெண், கணவன் மனைவி, காதல், திருமணம், தொழில், குடும்ப ஒற்றுமை போன்றவற்றிற்கு மோஹினி வசியம் உதவும்.
- லட்சுமி மற்றும் ஐஸ்வர்யா வசியம்: தன வரவு, வியாபார வளம், வியாபார வசியம், ஜன வசியம், வீட்டில் பணம், நகை, லட்சுமி கடாச்சம், பெற மற்றும் விரும்பிய காரியம், வெளிநாட்டு பயணம், வேலை கிடைக்க, கடன் விலக போன்றவற்றிற்கு இவ்வசியமானது உதவக்கூடியது.
- தெய்வ வசியம்: எதிரிகள் விடும் ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை தோஷம், பேய், பிசாசு, கெட்ட மோஹினி சேட்டை வாய் கட்டு, உடல் முடக்கம், குடும்ப முடக்கம், உயிர் மரணம் முடக்கம், தொழில் முடக்கம், தொழில் நஷ்டம் படுத்தல், திருமணத்தடை, குடும்ப உறவுமுறை தடை, கட்டுகள், துர் தேவதைகள் சேட்டை, நிலம், காடு, மாடு, பால் நாசனம் இவைகளில் இருந்து நன்மையும் நம் குடும்பத்தியும் காத்துக்கொள்ள முடியும்.
விஷ்ணு மாயா சாத்தன் சுவாமியின் வரலாறு
இக்கோவில்களின் வரலாறு பல நூறாண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்து புராணங்களில் கூறியபடி கேரளாவின் வடக்கு பகுதியில் பஞ்சநெல்லூர் பட்டத்திரிபாட் என்று ஒரு பிராமணர் வாழ்ந்தார். இவர் தீவிர சிவ பக்தரும் உபநிடதத்திலும் வேதங்களிலும் அதிக அறிவைக்கொண்டவர். ஆண்டு தோறும் மலைகள் காடுகள் ஆறுகளை கடந்து நெடுந்தூரம் கோட்டையூர் சிவன் கோவிலுக்கு சென்று அருள் பெறுவது வழக்கம். இப்பயணத்தின் பொது கொள்ளையர்களிடமிருந்தும் பத்திரகாளி பக்தரும் இவரது எதிரியும் ஆன மட்டப்பிளி நம்பூதிரியிடமிருந்தும் பஞ்சநெல்லூர் பட்டத்திரிபாட்க்கு மிரட்டல்கள் வந்தது. மட்டப்பிளி தனது சக்திகளை தப்பான செயல்களுக்கும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யவும் மட்டுமே பயன்படுத்தினார். மட்டப்பிளி அப்பகுதியில் வாழும் பெண்களிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதுடன் கொள்ளையர்களுடன் சேர்ந்து நெற்பயிர்களை தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் பட்டாதிரிபாட்டிடம் முறைப்பாடு செய்தனர். இதனை பட்டாதிரிபாட் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து தீர்வு காண முடிவு செய்தார். சிவா பெருமானும் பிரார்த்தனையை செவிமடுத்து மட்டப்பிளி பத்திரகாளி பக்தன் என்பதால் அவனை தனியா கொள்ள முடியாது என்றும் கூறினார். இதனால் இந்த வேண்டுதலை நிறைவேற்ற விஷ்ணுவின் உதவி தேவை பட்டது.
பஞ்சநெல்லூர் பட்டாத்திரிபாதிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில், சிவபெருமான் தன்னைப் பின்பற்றுபவர்களுடன் கட்டாளனாக உருவெடுத்து அவர்களால் கொள்ளையர்களை காட்டிலிருந்து வெளியேற்றினர். சிவபெருமான் காட்டில சுற்றி வரும் பொது ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் கூலிவாகாவை காண்கிறார். அவர் அந்த பெண்ணை காதலிக்கிறார் அதன் பின்னர் அந்த பெண் தனது மனைவியின் தீவிர பக்தர் எனவும் அறிகிறார். அந்த பெண் சிவபெருமானின் மனைவியான பார்வதியிடம் அவர்கள் காதல் பற்றி தெரிவித்து மன்னிப்பு வேண்டினாள். அவள் வேண்டுதலை கேட்டு சிவனுடன் சேரும் படி பார்வதி கேட்டுக்கொள்கிறாள். அதன் விஷ்ணு உதவியுடன்பின்னர் பார்வதி கூலிவாகாவாக மாறி சிவனுடன் இணைந்து கர்ப்பம் ஆகினார் பார்வதி. அக்கருவினை கூலிவாகவிற்கு மாற்றினார். அத்துடன் பார்வதி அந்த குழந்தையை குறிப்பிட்ட வயது வரை வளர்த்துவிட்டு மறுபடியும் தன்னிடம் ஒப்படைக்கும் படியும் கூறினார். கூலிவாகா அக்குழந்தைக்கு சாத்தன் என்று பெயர் வைத்து காட்டுக்கு எடுத்துச்சென்று வளர்த்தால்.
குறிப்பிட்ட வயதை அடைந்த சாத்தன் பார்வதி இருக்கும் கைலாசவிட்கு அனுப்பப்படுகிறான். அங்கு சாத்தனுக்கு பெயர் மாற்றப்படுகிறது. விஷ்ணுவின் மாயாவால் பிறந்ததினால் “விஷ்ணுமாயா” என்னும் பெயர் சூட்டப்பட்டு வேதங்கள் மந்திரங்கள் மற்றும் பல்வேறு திறன்களை மிக குறுகிய காலத்தில் கற்று கொடுக்கப்பட்டது அதில் நன்கு தேர்ச்சியும் பெற்றார். அத்துடன் சிவபெருமானின் ஆசிர்வாதமும் அவருடைய மஹிஷமும் வழங்கப்பட்டதுடன் சிவபெருமானின் உதவியாளரும் நண்பருமான வெள்ளை காளையை வாகனமாகவும் 390 உதவியாளர்களுடன் பூமியிலுள்ள மக்களுக்கு உதவவும் அருள் புரிந்தார்.
விஷ்ணுமாயா சாத்தன் சுவாமி தனது 390 சீடர்களுடன் பட்டாதிரிபாட்டின் வீட்டை வந்தடைந்து மட்டப்பிளியின் தீய பழக்க வழக்கங்களையும் கொள்ளையர்களையும் அந்த ஊர் மக்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பேன் என்று உறுதியளித்தார். விஷ்ணுமாயா சாத்தன் சுவாமி பத்ரகாளியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மட்டபிளியை சந்திப்பது சற்று கடினமாக இருந்தது. விஷ்ணுமாயா சாத்தன் சுவாமி ஒரு சாதாரண மனிதர் அல்ல என்றும் சிவன் மற்றும் விஷ்ணு இருவரின் மகன் என்றும் பத்ரகாளி உணர்ந்ததும் அவர் தனது சந்திப்பை விலக்கிக் கொண்டார், இதன் விளைவாக மட்டப்பிளிக்கு தோல்வி ஏற்பட்டது. பத்திரகாளியின் ஆசிர்வாதமும் விஷ்ணுமாயா சுவாமிக்கு கிடைக்கப்பெற்றது. பட்டாதிரிபாட்டின் வேண்டுதலை நிறைவேற்றிய பின் அவ்விடத்திலிருந்து புறப்பட தயார் ஆன விஷ்ணுமாயா சுவாமியை அவ்வூர் மக்கள் தடுத்து அங்கு தங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்டு அங்கு தங்க முடிவு செய்த விஷ்ணுமாயா சுவாமிகள் தனது சக்தியை தப்பான செயல்களுக்கு பயன்படுத்த கூடாது என்னும் தெளிவுபடுத்தலின் பின்னர் சீடர்களுடன் அங்கு தாங்கினார்.
இவ்வாறு பல திறன்களும் சக்திகளையும் கொண்ட விஷ்ணுமாயா சுவாமிகளுக்காக கோவில்கள் கட்டப்பட்டு வழிபட தொடங்கினர். இந்த எல்லா அம்சங்களையும் தாண்டி விஷ்ணுமாயா சாத்தன் ஸ்வாமி பாமர மக்களிடையே ஒரு நபராக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார். விஷ்ணுமாயா சாத்தன் சுவாமியை பக்தர்கள் தங்களுக்குள் ஒருவராகக் கருதுகிறார்கள். தங்கள் எல்லா பிரார்த்தனைகளுக்கும் உடனடியாகப் பதிலளித்து எல்லா கவலைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கிறார் என்றும் நம்பினர்.
விஷ்ணு மாயா கோவில்கள் பட்டியலும் அமைந்திருக்கும் இடங்களும்
- ஆவணங்காட்டு களரி, திரிசூர், கேரளா.
- சுனங்கிகி பகவதி
- கனடிகுட்டிச்சாத்தான் காவு, திரிசூர், கேரளா.
- கரணயில் மடம், திரிசூர், கேரளா.
- கரின்குட்டி கோவில், திரிசூர், கேரளா.
- பிலன்கள ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில், பூவார், கேரளா.
- பெரிங்கோட்டுக்கற தேவஸ்தானம் ஸ்ரீ விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் கோவில், கிழக்குமுரி,கேரளா.
- விஷ்ணு மாயா கோவில், திரிஸ்ஸுர், கேரளா.
- குருபதத்தில் ஸ்ரீ மகா பத்திரகாளி, விஸ்ணுமாயா கோவில், திருவனந்தபுரம், கேரளா.
- முத்துப்பரம்பில் விஷ்ணுமாயா கோவில், திரிஸ்ஸுர், கேரளா.
- ஸ்ரீ விஷ்ணு மாயா கோவில், திரிஸ்ஸுர், கேரளா.
- புலிகத்தர ஸ்ரீ விஷ்ணு மாயா பத்திரகாளி கோவில், கோனம்மாவு, கேரளா.
- பேராழி ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில், புன்குண்ணம், திருஸ்ஸுர், கேரளா.
- ஸ்ரீ ஆவணங்காட்டிலி களரி ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில், கிழக்குமுரி,கேரளா.
- ஸ்ரீ விஷ்ணு மாயா சாத்தன் கோவில், கோயம்புத்தூர், தமிழ் நாடு.
- விஷ்ணு மாயா கோவில், வடக்கஞ்சேரி, கேரளா.
- மாயசந்நிதி ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில், இரிஞ்சாலக்குடா, கேரளா.
- வடக்கும்புறம் ஸ்ரீ விஷ்ணுமாயா தேவஸ்தானம், செந்திரபினி, கேரளா
- ஸ்ரீ விஷ்ணு மாயா கோவில், கடம்பழிபுரம், கேரளா.
- கலரிக்கல் ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில், சோரனூர், கேரளா.
- வெலிகட் விஷ்ணு மாயா கோவில், நாத்திக பீச், கேரளா.
- ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில் மஞ்சகாக்க, திரிசூர், கேரளா.
- புலிகத்தர ஸ்ரீ விஷ்ணு மாயா பத்திரகாளி கோவில், தொட்டிப்பல், கேரளா.
- இறண்டதாரா பத்திரகாளி விஷ்ணுமாயா கோவில், நயறம்பலம், கேரளா.
விஷ்ணு மாயா கோவில்களானது மிகவும் பிரபல்யமான கோவில் ஆகும். இக்கோவில்களின் காரணமாக இது அமைந்துள்ள கிராமங்களும் தனக்கென புகழ் பெற்று உள்ளது. இந்த கோவிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர். அதிலும் முக்கியமாக கேரளாவில் உள்ள கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக காணப்படுகிறது.
கருவண்ணூர் காரணயில் தேவஸ்தானம்
விஷ்ணுமாயா கோவில்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த கோவில்களில் இதுவும் ஒன்று. கருவண்ணூர் காரணயில் தேவஸ்தானம் பல தசாப்தங்களாக பகவான் ஸ்ரீ விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் சுவாமியின் பூர்வீக இல்லமாக அறியப்படுகிறது. இங்கு நாம் முன்னோர்களின் ரகசிய மந்திரங்கள் மற்றும் தாந்திரீக மற்றும் மாந்திரீக கர்மங்களைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த பூஜைகளை செய்து வருகிறார்கள். மேலும் இங்குள்ள ஸ்ரீ விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் சுவாமிகள் தேவஸ்தான அதிபதி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் வீற்றிருப்பது சிறப்பு. 400 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய தலைமுறை கோயிலோ அல்லது சுற்றுலா அம்சங்களோ கட்டப்படவில்லை. ஏனென்றால் தங்கள் முன்னைய தலைமுறையினர் ஒப்படைத்த பாரம்பரியத்தை இங்கு பின்பற்றுகிறார்கள்.
விஷ்ணுமாயாவின் பிறந்தநாள் “திரவெள்ளட்டு” என்று கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற இந்த நாள் மிகவும் பொருத்தமானதாக கூறப்படுகிறது. ஸ்தாபகர் பூசாரி ஸ்ரீ வேலுமுத்தப்பனின் சிலையும் குஷிகல்பத்திலிருந்து விஷ்ணுமயா ஸ்வாமி சிலையுடன் வெளியே கொண்டு வரப்பட்டு அத்திருவிழா 9 நாட்கள் நடைபெறும்.
இக்கோவிலில் இடம்பெறும் சக்தி வாய்ந்த வசிய முறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாந்தி கர்மம்
வாய்வழி வசியம், திருஷ்டி வசியம், தொடுதல் வசியம் போன்ற பல வசியங்கள் உள்ளன. வசியமானது பல கோணங்களில் மனித உடனல்களில் செயட்படுத்த படுகிறது. வசியம் செய்வதன் மூலம் மனிதர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியும். அது மட்டுமின்றி எமக்கு தேவையான விடயங்களை நாம் கட்டுப்படுத்தும் மனிதர்கள் மூலம் செய்து முடிக்கலாம்.
வித்வேஷனம்
இம்முறையானது ஒருவர் ஒருவருக்கிடையே உள்ள பழக்கத்தை துண்டிப்பதற்கு பயன்படுத்தப்படும். காதலன்-காதலி, கணவன்-மனைவி, நண்பர்கள் இப்படி நெருக்கமானவர்களை பிரிப்பதற்காக வித்வேஷனம் முறை பிரியோகிக்கப்படுகிறது. இவ்வாறு பிரியோகப்படுத்தப்பட்ட பின்னர் முழுவதுமாக அவர்கள் பிரிந்து செல்லக்கூடிய சக்தி இந்த முறையில் உண்டு. குடும்ப கெளரவம் குடும்பத்தின் பெயரை காப்பாற்றும் நோக்கில் இந்த முறையை அணுகுவர்.
உட்சாதனம்
ஒருவரின் மேல் இருக்கும் வெறுப்பின் காரணமாக அல்லது வியாபார போட்டியின் காரணமாக குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒருவரை விரட்டுவதட்காக இந்த உட்சாதனம் முறை உதவக்கூடியது. குடும்ப தகராறு அல்லது பிடிக்காதவர் அருகில் இருக்க முடியாமல் போகும் பட்சத்தில் இம்முறை உதவக்கூடியது.
ஸ்தம்பனம்
இம்முறையானது ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கு பிரயோகிக்க கூடியது. அதாவது தொழிலோ அல்லது வருமானத்திலோ முன்னேறி செல்லும் பொது அவரை தடுத்து, அவர் தடுக்கப்படும் இடத்திலே எந்தவொரு முன்னேற்றமும் இன்றி நிறுத்துவதற்கு ஸ்தம்பனம் முறை பயன்படுகிறது.
மாரணம் (மரணம்)
தமக்கு பிடிக்காத ஒருவரை அழிப்பதற்கு இம்முறை பயன்படும். தமக்கு எதிராகவோ அல்லது நம் தொழிலுக்கு எதிராகவோ அல்லது குடும்பத்துக்கு எதிராகவோ எப்பொழுதும் எதிராக செயற்படும் ஒருவரை முற்றாக அளிப்பது அதாவது மாந்திரிகம் மூலம் கொலை பண்ணுவது மாரணம் ஆகும்.
மேல் குறிப்பிட்ட மாந்திரிக முறைகள் விஷ்ணுமாயா கோவிலில் செய்து கொடுக்கப்படுகிறது. விஷ்ணுமாயா சுவாமி கேட்டவுடன் கொடுக்கும் வரம் நிறைந்த கடவுளாக மக்களால் போற்றப்படுபவர். இதனால் இவருக்கான பக்தர்கள் அதிகம் காணப்படுவதுடன் இவரின் பெயரில் பல கோவில்களும் கட்டப்பட்டு வழிபட்டு வருகின்றதுடன் மாந்திரிக முறைகளும் இக்கோயில்களில் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான மாந்திரிக முறைகள் சரியான பதில்களை கொடுப்பதாகவும் பெரும்பாலான பக்தர்கள் நம்புகின்றனர்.