ஆமணக்கு ஒரு சிறிய மூலிகை தாவரமாகும். இவை மென்மையான நீர் வற்றாத இடங்களில் வளரக்கூடியவை. இது மிதமான சூழலிலும் ஆண்டுதோறும் வெப்பமான பருவ காலங்களில் பயிரிடப்படுகின்றன. வலுவான மற்றும் வேகமான வளர்ச்சி இருப்பினும் இது வளரும் பருவத்தில் 6 முதல் 10 அடிக்கு மேல் வளரும் தன்மை உடையவை. இது விரைவாக வளரும் தாவரம் மற்றும் வளரும் பருவத்தில் கிளைகளைச் சேர்த்து அடர்த்தியான கிளைகளை கொண்ட வலுவான தாவரம். வெப்பநிலை 32F க்கு கீழே குறையும் போது இம்மரங்கள் இறக்கும் வாய்ப்பினை கொண்டவை. இந்த தாவரத்தில் பல யூபோர்பியா இனங்களில் காணப்படும் பால் மற்றும் மரப்பால் சாறுக்கு பதிலாக நீர் சாற்றை கொண்டவை.
- பொதுவாக 3-5 மீட்டர் உயரம் கொண்ட அத்துடன் பூக்களும் கொண்ட மூலிகை தாவரமாகும்.
- இளம் கிளைகள் கருஞ்சிவப்பு அல்லது வெளிர் பச்சை நிறங்களில் உறுதியாக மற்றும் தடிமமாக இருக்கும்.
- பழைய கிளைகள் மற்றும் தண்டு சாம்பல் நிறமாக காணப்படும்.
- இலைகள் இளம் பளபளப்பான சிவப்பு பச்சை நிறங்களில் காணப்படும் மற்றும் தண்டுகள் 15 முதல் 30 மி.மீ விட்டமும் கொண்டவை. சிலசமயங்களில் இவை 60 மி.மீ. வரை அதன் கிளைகளை வளர்க்கக்கூடியவை.
- 2.5 செமீ விட்டம் கொண்ட பழம், மென்மையான பச்சை அல்லது கருஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும்.
- ஒவ்வொரு பிரிவிலும் 1.2-1.5 செமீ நீளமும் 6-10 மிமீ அகலமும் கொண்ட ஒரு மென்மையான புள்ளிகள் கொண்ட விதை உள்ளது.
இலைகளின் நாற்றம் மற்றும் கசப்பு தன்மை காரணமாக கால்நடைகள் இந்த செடியை அரிதாகவே சாப்பிடுகின்றன. இது மேய்ச்சல் நிலங்களில் பரவலாக காணக்கூடியவையாக உள்ளன, குறிப்பாக வண்டல் மண் நிலப்பரப்புகளில் இவற்றை காணக்கூடியதாக உள்ளன. எவ்வாறு இருப்பினும் இத்தாவரத்திலிருந்து எடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியவையாகவும் பலதரப்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றது.
ஆமணக்கு எண்ணெய் பெறப்படும் தாவர வகைகள்
பச்சை ஆமணக்கு எண்ணெய் மரம்: பெரிய, பளபளப்பான பச்சை இலைகள் கொண்ட சிவப்பு அல்லது ஊதாநிறத்திலான கூரான பழங்களை கொண்ட தாவர இனம் ஆகும். எண்ணெய் நிறைந்த விதைகள் காணப்படுவதால், எண்ணையின் பயன் காரணமாக இத்தாவரத்தினை வளர்க்கின்றனர்.
சிவப்பு ஆமணக்கு எண்ணெய் மரம்: இவை பொதுவாக “கார்மென்சிட்டா” வகை என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த வகையான தாவரமானது அதன் சிவப்பு ஊதா இலைகள் மற்றும் தண்டுகளுடன் தோட்டத்திற்கு மேலதிக அலங்கார மதிப்பை கொடுக்கும் தாவரமாக அமைகிறது. பூச்சிகளை ஈர்க்கும் தன்மையின் கொண்டவைகளாக காணப்படுகின்றன.
ராட்சத ஆமணக்கு எண்ணெய் மரம்: இவ் ராட்சத ஆமணக்கு எண்ணெய் மரங்கள் 10 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்திற்கு வளரும் திறன் கொண்டது. இவை அதிக விதைகள் மற்றும் பெரிய இலைகளை உற்பத்தி செய்யும் தன்மைகொண்டது.
ஆமணக்கு எண்ணெய் மரத்தின் நன்மைகள்
- எண்ணெய் உற்பத்தி: ஆமணக்கு எண்ணெய் மரத்தின் முதல் நன்மை அதன் எண்ணெய் நிறைந்த விதைகள் ஆகும். இந்த விதைகளிலிருந்து ஆமணக்கு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது மற்றும் அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- மருத்துவ பயன்கள்: ஆமணக்கு எண்ணெய் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இது அதன் ஒவ்வாமை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்றது.
- தோல் மற்றும் முடி பராமரிப்பு: ஆமணக்கு எண்ணெய் அதன் ஈரப்பதம் மற்றும் தோள்களுக்கு ஊட்டமளிக்கும் குணங்களினால் தோல் பராமரிப்பு பொருட்களில் ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்த படுகின்றது. முடி உதிர்வு முடி செறிவின்மை போன்ற விடயங்களை நிவர்த்தி செய்து முடி சீராக வளர இவ்வெண்ணை உதவுகின்றது.
- தொழில்துறை பயன்பாடுகள்: ஆமணக்கு எண்ணெயில் அதிக பாகுத்தன்மை மற்றும் இரசாயன நிலைத்தன்மை காணப்படுவதால் லூப்ரிகண்டுகள், வண்ணப்பூச்சுகள், பிளாஸ்டிக் மற்றும் துணி தயாரிப்பு போன்ற தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது.
- பாரம்பரிய மருத்துவம்: ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆமணக்கு எண்ணெய் நச்சு தன்மையை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் மூட்டு வலி சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெய் மரம் ஒரு கண்கவர் தாவர இனமாகும். இது பரந்த அளவிலான நன்மைகள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன் எண்ணெய் உற்பத்தி மற்றும் மருத்துவ குணங்கள் முதல் துணி தயாரிப்பு வரை ஆமணக்கு தாவரம் அதிக பயன்பாடுகளை கொண்டதாக காணப்படுகின்றது. நீங்கள் இயற்கை வைத்தியம், தோல் பராமரிப்பு அல்லது தொழில்துறை பயன்பாடுகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பீர்களாயின் ஆமணக்கு மரம் பயிரிடுவதால் அதிக இலாபத்தை ஈட்ட முடியும்.