எகிப்து, மேற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கருங்காலி மரமானது ‘EBONY’ கண்டறியப்பட்டது. ஆனால் இம்மரம் கலை வடிவம் பெற்றது எகிப்தில் தான். எகிப்து நாட்டு மன்னர்களுக்கான சிலை வடிவங்கள் போன்றவை இம்மரத்திலே வடிவமைக்கப்பட்டது. இம்மரத்தின் மூலம் செதுக்கப்பட்ட கலை பொருட்கள் அந்த நாட்டு அரச மாளிகையை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டது.
இம்மரமானது பிற்காலத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு அலுமாரி தயாரிப்பதற்கு 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னரே கருங்காலி மரத்தின் வணிகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.
எகிப்து நாட்டில் இம்மரத்தின் பெயரானது ‘HBNY ‘ என்றே அழைக்க பட்டது. அதிலிருந்து ‘EBONY ‘ என்கின்ற பெயர் உருவானது. இம்மரத்தின் தேவை அதிகரிக்க அதன் வணிகமும் பெறுமதியும் அதிகரிக்க தொடங்கியது.
இம்மரமானது மிகவும் மெதுவாக வளரக்கூடியதும் சுமார் 30 அடி நீளம் வரை வளரும். இம்மரம் தன் முதிர்ச்சியை அடைய 60 தொடக்கம் 200 வருடங்கள் வரை எடுக்கும். இதனாலேயே இம்மரம் அரிய வகை மரமாக காணப்படுகிறது. எகிப்தில் காணப்பட்ட கருங்காலி வகையானது ‘Gaboon Ebony’ என அழைக்கப்பட்டது. இம்மரமானது இலங்கையில் ‘Ceylon Ebony’ எனவும் அழைக்கப்படுகிறது. இப்பெயர்களானது நாட்டுக்கு நாடு வேறுபட்டு காணப்படுகிறது தவிர இதன் வகை கருங்காலி மற்றும் செங்காலி என இரண்டு வகை மட்டுமே ஆகும்.
கருங்காலியின் தன்மை
கருங்காலி மரமானது வேறு மரங்களை விட அதிக வலிமை கூடியதும் அதிக விலை மதிக்கத்தக்கதும்ஆகும். Carban என்னும் கரித்தன்மையை தனக்குள் சேகரிக்கும் திறன் கொண்டதாகும். இதனால் தான் அதன் தண்டானது கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இம்மரமானது அதிக வெப்ப நிலையுள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியது. எந்த நாட்டிலும் இம் மரத்தினை நட முடியும்.
கருங்காலி மரமானது மிகவும் உறுதியானது அதிக நிறை கொண்டதுமான மரமாகும்.
இந்த மரத்தின் தன்மையானது மிகவும் பொலிவாக காணப்படும். இதனாலேயே இம்மரத்தினை அதிகமா செதுக்கல் வேலைகளுக்கு பயன் படுத்துகின்றனர்.
இதன் அதிக பாரத்தின் காரணமாக இம்மரமானது தண்ணீரில் எளிதாக மூழ்க கூடியது. மிதக்கும் தன்மை இதனிடம் காணப்படாது.
கருங்காலி மரத்தினை இனம் காணும் முறை
நிறை அதிகமாக காணப்படும்.
நடுத்தண்டு அடர்ந்த கருப்பு நிறத்தில் காணப்படும்
நீரில் இடும் போது மிதக்க முடியாமல் மூழ்கிவிடும்.
நீரில் இடும் போது நீரின் நிறம் மாறினாலும் கருங்காலி மரத்தின் நிறம் கொஞ்சமும் மாறாமல் இருக்கும்.
கருங்காலி மரத்தின் பயன்கள்
கருங்காலி மரத்தின் பட்டை அதிக மருத்துவ குணம் கொண்டதாகும்.
கருங்காலி வேரின் பட்டையில் பசை எடுக்க முடியும்.
பட்டையின் பசையை உலர்த்தி மாவாக்கி பாலில் இட்டு குடிப்பதன் மூலம் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
அத்துடன் இரத்த போக்கு உள்ள பெண்களுக்கும் நரன்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும் அதனை குணப்படுத்தும் தன்மை இம்மர பட்டையில் உள்ளது.
அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற நோய்களுக்கு குணப்படுத்தும் திறன் உண்டு.
கருங்காலி மரம் மூலம் தயாரிக்கப்படும் மாலை மற்றும் வளையல்களை அணிவதன் மூலம் எதிர் மறையான விடயங்கள் நீங்கி நேர் மறையான விடையங்கள் கிடைப்பதாக தெரிவிக்கப்டுகிறது.
கருங்காலி மரத்தில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள்
மாலைகள்
கை வளையல்கள்
சிலைகள்
தாயத்து
தளபாடங்கள்
ஆபரண பொருட்கள்
கருங்காலி மாலைகள் மற்றும் வளையல்கள் பிரபல்யம் அடைந்த முறை
கடந்த சில வருடங்களாக கருங்காலி மாலைகள் மற்றும் வளையல்கள் ரொம்பவே பிரபல்யம் அடைந்தது வருகிறது. இதற்கு மூல காரணம் சினிமா பிரபலங்கள் ஆகும். இவர்கள் பொது விழாக்களில் கருங்காலி மாலைகளை அணிந்து வருவதை காணும் ரசிகர்கள் இதனை பின்பற்றி நடந்து கொள்கின்றனர்.
அது மட்டுமின்றி தமது வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் மற்றுமின்றி ஊடகங்களும் இதனை பேசும் பொருளாக மாற்றி வருகின்றனர். இவர்களை பின்பற்றி எல்லோரும் கருங்காலி மாலைகளை அணிந்து வருகின்றனர்.
கருங்காலி ஆபரணங்களின் வளர்ச்சியும் மூட நம்பிக்கையும்
முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கருங்காலி மரத்தின் கீழ் அமர்ந்தே தமது தியானங்களை செய்தார்கள் என்றும் அவர்கள் தமது தியானத்தின் போது மனதை சாந்த படுத்தவும் நேர் மறையான எண்ணம் தோன்றும் எனவும் கூறப்படுகிறது.
ஒருவரின் குணத்தினை நல்வழிபடுத்த கூடிய சக்தி கருங்காலி மரத்துக்கு உண்டு என கூறப்படுகிறது.
தொழில் மற்றும் வருமானத்தை மாற்றும் சக்தி கருங்காலிக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
தீய சக்தி அண்டாமல் இம்மரம் பார்த்து கொள்ளும் என கூறப்படுகிறது.
இவ்வாறான விடயங்களை கூறி சாமியார் தொடக்கம் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் விளம்பர படுத்தப்படுகிறது. இதனூடாக சாமியார்கள் மற்றும் கருங்காலி மாலை விற்பனையாளர்கள் வியாபாரத்தினை தேடி கொள்கின்றனர்.
முனிவர்கள் சொல்வது உண்மை ஆயின், முனிவர்கள் தியானம் செய்யும் இன்னோர் இடம் நீருக்கடியில் தான் அங்கும் மன சாந்தி மற்றும் நேர் மறையான விடயங்களை முனிவர்கள் பெற்றனர். அப்போ ஏன் அந்த வழியை யாரும் பின்பற்றவில்லை என்பது கேள்விக்குறியே.
மேல் குறிப்பிட்ட எந்த விடயமும் விஞ்ஞான ரீதியாக இதுவரை நிரூபணமாகவில்லை. இவ்வாறான விடயங்களை எல்லோருக்கும் பரப்பி தமது வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர்.
போலி விடயங்களினால் ஏற்படும் விளைவுகள்
போலி விளம்பரம் மற்றும் செய்து மக்களிடம் அதிக பணத்தை பெற்று கொள்கின்றனர். கடைசி 2 வருடங்களாக கருங்காலிக்கான விலை அதிகமா உயர்ந்து காணப்படுகிறது.
வாங்கியது அசல் கருங்காலியா என்று கூட தெரியாமல் பலர் நம்பி பல்லாயிரம் ரூபாய்களை இழந்து நிற்கின்றனர்.
அது மட்டுமின்றி சட்ட விரோதமா கருங்காலி மரத்தினை வெட்டி கடத்துகின்றனர்.
இம் மூட நம்பிக்கையானது இந்தியா தொடக்கம் இலங்கை வரை பரவி செல்கிறது.