வர்மக்கலை என்பது மருத்துவக்கலையின் ஒரு பகுதியாகும். இக்கலையானது சித்தர்களால் உருவாக்கப்பட்டதாகும். இக்கலை மருத்துவ நோக்கத்திற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டு பின்னர் தற்காப்புக்காக பயன்படுத்த தொடங்கினர். மனிதனோட நரம்பு முனைகள் சிலவற்றை வர்ம ஸ்தானங்கள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு மருத்துவர்கள் குறிப்பிடும் வர்ம ஸ்தானங்களில் பலமாக தாக்கப்பட கூடாது மீறி தாக்கப்படும் பொது காயம் ஏற்படவும் உயிருக்கே ஆபத்தாக முடியும் எனவும் மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது. அதே வேளை சரியான தொடு உணர்வுகள் மூலம் சிகிர்ச்சை அளித்து மனித உள்ளுறுப்புகளின் செயல் திறனை அதிகரிப்பதுடன் உடலை சீராகவும் இயக்க முடியும்.
தற்காப்பு கலைகளுக்கு முன்னோடியாக இருப்பது சித்தர்கள் என கூறப்படுகிறது. மேலும் எதிரியின் கால் அசைவை வைத்து சுவாச நிலையை அறிந்து சரியாக தாக்கி வெல்ல முடியும் என அகத்தியர் இதனை கூறியுள்ளார். காலன், ஏமம், அடக்கம், சூட்சுமம் மற்றும் வன்மம் என்பன வர்மக்கலையின் வேறு பெயர்களாகும். வர்மக்கலையை அகத்தியர் நான்கு வகையாக பிரித்திருந்தார்.
இக்கலையை சிவபெருமான் தன் மகனான முருகனுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும், சங்க இலக்கிய காலத்தில் சித்தர்களில் முதன்மையான அகஸ்திய முனிவருக்கு முருகப்பெருமான் இந்தக் கலையைக் கற்றுக் கொடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
வர்ம கலையின் வகைகள்.
படுவர்மம்: இம்முறையும் ஒரு ஆபத்தான வர்ம முறையாகும். உடலில் இருக்கும் வர்ம பகுதிகளில் தாக்கும் போது உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
தொடுவர்மம்: பலமாக ஒருவரை தாக்குவதன் மூலம் தொடு வர்மம் ஏட்படுகிறது. இதனை எளிதில் குணப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தட்டுவர்மம்: இது ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி வலி ஏற்படாமல் ஒருவரை தாக்கி லேசான முறையில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகும். இவ்வாறு தாக்கப்படும் நபரை இதற்குரிய தனித்துவமான சிகிர்சை முறையில் மட்டுமே குணப்படுத்த முடியும்.
நோக்கு வர்மம்: ஒருவரை பார்வையின் மூலம் கட்டுப்படுத்தி ஆட்டி வைக்க இந்த நோக்கு வர்மம் உதவும். குறிப்பிட்ட வினாடிக்குள் ஒருத்தரை பார்வை மூலம் கட்டுப்படுத்த முடியும். வர்மக்கலைகளில் மிகவும் ஆபத்தானது இந்த வர்ம முறையாகும். இந்த வர்ம முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் உலகிலேயே மிகவும் ஆபத்தானவர்கள் என அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாரும் இந்த கலை திறனை வைத்து துல்லியமாக பிரயோகிக்க முடியாது மிகுந்த திறன் கொண்டவரால் மட்டுமே இதனை மிக துல்லியமாக செய்ய முடியும். இக்கலையில் நன்கு பயிற்சி பெற்றவர் எதிரியை வீழ்த்தவும் முடியும் வீழ்ந்தவரை எழுப்பவும் முடியும். வர்ம கலையால் தாக்கப்பட்ட ஒருத்தரை குறுகிய காலத்துக்குள் குணப்படுத்தி விடுதல் அவசியம். இல்லாவிட்டால் மரணம் கூட சம்பவிக்கலாம்.

வர்மப்புள்ளிகளும் இடங்களும்.
- தலை – 37
- நெஞ்சு – 13
- உடலின் முன் பகுதி – 15
- முதுகுப்பகுதி – 10
- கைகளின் முன் பகுதி – 09
- கைகளின் பின் பகுதி – 08
- கால்களின் முன் பகுதி – 19
- கால்களின் பின் பகுதி – 13
- கீழ் முதுகுப்பகுதி – 08
வெட்டுக்காயங்களில் இருந்து வரும் இரத்தத்தை எந்தவிதமான கட்டும் போடாமலே வர்ம கலை மூலம் நிறுத்தி விட முடியும். வாந்தி, ஜன்னி மற்றும் ஒற்றை தலைவலி போன்றவற்றை இக்கலையின் மூலன் குணப்படுத்த முடியும்.
நரம்பியலின் அடிப்படை தான் வர்மம் சுவாசத்தில் உள்ள பிராணவாயு நுரையீரலில் அதிகம் தங்குவதன் மூலம் பிராண சக்தி உடலுக்கு கூடுதலாக கிடைக்கும் என்பதை சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் தமது பயிற்சியின் போது சுவாசத்தை கட்டுப்படுத்தி அதனை பிராணாயமம் என பெயரிட்டனர். வர்ம கலையின் பயிற்சியில் பிராணாயமம் முக்கியமான ஓர் பயிற்சியாகும்.
உச்சந்தலை சுவாசம் பற்றி அறியாத ஒருவரால் வர்ம மருத்துவராக முடியாது என இக்கலை குறிப்பிடுகிறது. உச்சந்தலை சுவாசம் பற்றி அறிந்திருந்தால் தான் உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இவ்விரண்டு சுவாசம் மூலம் தான் வர்மப்புள்ளிகளின் இயக்கம் நடைபெறுகிறது. இந்த வர்ம புள்ளிகளின் இயக்கம் நரம்புகளின் இயக்கம், ரத்த ஓட்டத்தின் நிலை இவை அனைத்தும் சுவாசத்தை பொறுத்தே இயங்குகிறது.
வர்மக்கலையின் அடிப்படை தேவையாக மனக்கட்டுப்பாடு, தவப்பயிர்ச்சி, இறையுணர்வு போன்றவை வர்ம கலை கற்க விரும்புவோருக்கு முக்கியமானதாகும். இவ்வியல்புகளை கொண்டிராத பட்சத்தில் நேரடியாக குருவிடம் பயிற்சி பெற முடியாது. இறைவனின் அருள் மற்றும் குருவின் துணை இல்லாமல் இக்கலையை கற்க முடியாது.
தற்காப்புக் கலையாக வர்மக்கலையின் பழக்கம் குறைந்து வரும் நிலையில் பக்கவாதம், சுளுக்கு, எலும்பு முறிவுகள் மற்றும் நரம்புக் கோளாறுகள் உள்ளிட்ட சில வகையான நோய்களைக் குணப்படுத்த இது தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதை ஒட்டுமொத்தமாக ஒழுக்கத்திலிருந்து பிரிக்கக்கூடாது. இல்லையெனில் பாரம்பரிய ஞானம் மற்றும் அதனுடன் இணைந்த கலாச்சாரம் இழக்கப்படலாம். இந்த கலையில் தேர்ச்சி பெற பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
போர் மற்றும் மருத்துவ நடைமுறைகள் இரண்டிற்கும் உடல் வலிமை தேவை. அடிகள், உதைகள், தடுப்புகள் மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் ஆகியவற்றிற்கு உடல் உறுதி தேவைப்படுகிறது. பயிற்சியின் போது மாணவர்களின் உடல் வலிமை மற்றும் மன முன்னேற்றம் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து ஒரு வகையான மனோதத்துவ உள்ளுணர்வை உருவாக்குகின்றன. முதுநிலை மருத்துவம் மற்றும் தற்காப்பு திறன் இவை அனைத்தும் வர்மக்கலை மருத்துவ மற்றும் தற்காப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பயிற்சியாளர்களின் கூற்றுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.