மந்திரம் என்பது மிகவும் பழமையான சொல். உலகில் எல்லா இடங்களிலும் ஒவ்வொரு பெயரால் அறியப்படுகிறது. சூனியம் என்ற போர்வையில் மந்திரங்களை சில தீயவர்கள் பயன்படுத்துகின்றனர். தீய சக்திகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களை அழிக்க மேட்கொள்ளப்படும் பூஜைகளே மாந்திரீகம் எனப்படும். உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ பாதிப்பினை உட்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்கின்றனர்.
அமானுஷ்ய சக்திகள்
சில தீய சக்திகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்கள் மற்றும் குறிப்பிட்ட மந்திரங்கள் மூலம் இந்த சக்திகளின் தன்மை ஆகியவற்றை வரலாற்றுச் சுவடுகள் குறிப்பிடுகின்றன. சூனியம் என்பது பொதுவாக தீய மற்றும் சுயநல நோக்கங்களுக்காக மந்திரம் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
செய்வினை என்றால் என்ன?
மாந்திரீக முறைகளில் மிகவும் கொடூரமான மாந்திரீக முறை செய்வினை ஆகும். பிடிக்காத ஒருத்தரை பலிவாங்கும் நோக்கில் இம்முறையினை பயன்படுத்துவர். ஒருவரை பணம், சொத்து, உடல் ஆரோக்கியம் போன்ற எல்லாவற்றில் இருந்தும் அழியச்செய்வது செய்வினை முறையாகும்.
ஏவல் என்றால் என்ன?
மிகவும் கட்டுப்பாட்டுடனும் மன உறுதியோடும் இருக்கும் ஒருவரை பலிதீர்க்க ஏவல் முறை பயன்படுகிறது. அதாவது நல்ல வழியில் வாழ நினைக்கும் ஒருத்தரை அவருக்கு பிடிக்காத தப்பான விடயங்களை செய்ய தூண்ட வைப்பது ஏவல் முறையாகும்.
வசியம் என்றால் என்ன?
வசியம் என்றால் தமக்கு விரும்பிய ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ தன் பக்கம் வரவைப்பதற்கு இந்த வசிய முறை உதவுகிறது. யார் யாரை வேணும் என்றாலும் வசியம் பண்னிக்கொள்ள முடியும். இது பெரும்பாலும் தாம் காதலிப்பவர்கள் சம்மதிக்கா விட்டால் அவர்களை தன் பக்கம் ஈர்க்க பயன்படுகிறது.
வைப்பு என்றால் என்ன?
தனக்கு பிடிக்காத ஒரு நபருக்கு அவரை அளிக்கும் நோக்கில் பொருட்களின் மேலே மந்திரிச்சு அப்பொருளினை அவரிடம் அல்லது அவர் இருக்கும் இடத்திலேயோ வைத்து அவரின் வாழ்க்கையை அளிப்பது வைப்பு எனப்படும்.
மேற்குறிப்பிட்ட மாந்திரீக முறைகள் அனைத்தும் ஒருவரின் மேலுள்ள மோகத்தாலும் வெறுப்பாலும் செயற்படுத்தப்பட்டு அவரை தம் வச படுத்த நினைப்பர் அல்லது அவரை அழிக்க நினைத்து இவ்வாறான விடயங்களை பின்பற்றுவர். இவ்வாறான மாந்திரீக விடயங்களை செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபரின் தலை முடி, ஆடை, புகைப்படம், காலடி மண், அணிகலன்கள் போன்றவற்றினை பயன்படுத்தி மாந்திரீகங்களை உருவாக்குகின்றனர்.
யாரை எல்லாம் மாந்திரீகம் பாதிக்காது?
தங்கள் குடும்பக் கடவுளான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரையோ அல்லது காமாஷியையோ அடிக்கடி வழிபடும் நபர் அனைத்து மந்திர விளைவுகளிலிருந்தும் விடுபடுவார்கள் இவர்களை எந்த தீய சக்தியும் நெருங்காது.
காயத்ரி மந்திரத்தை தவறாமல் வேண்டுபவர், யோகா மற்றும் தியானம் செய்பவர், தங்கள் இரத்த பந்தம் இல்லாத இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள் ஆகியோரை யாராலும் மயக்க முடியாது.
தன் கவனத்தை ஒருமுகப்படுத்தி கடவுளை வழிபடக்கூடிய ஒருவனுக்கு வசியத்திற்குள்ளாவது சாத்தியமற்றது.
வேதம் கற்று ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மாந்திரீகம் பலன் தராது. மாந்திரீகம் அவர்களை மயக்க முடியாது என்று கூறப்படுகிறது.
செய்வினை இருப்பதை எப்படி கண்டறிவது?
- அவர்களின் ஜாதகத்தில் பலவீனமான ஒளி மற்றும் சாதகமற்ற கிரக நிலை உள்ளவர்கள் இந்த தீய சக்திகளுக்கு உட்பட்டவர்கள். மாந்திரீகத்தால் அவதிப்படுபவர்களுக்கு தூக்கம் வராது. கெட்ட கனவுகள் ஒரு பெரிய உயரத்தில் இருந்து விழுவது ஆகியவை அடங்கும்.
- தலைசுற்றல், ஒற்றைப்படை நடத்தை, மனச்சோர்வு, பதட்டம், திகைப்பு மற்றும் நீங்கள் செய்யும் எதுவும் மேம்படாது என்ற உணர்வு.
- நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்காவது நிறைய விபத்துகள் ஏற்பட்டுள்ளதா?
- துரதிர்ஷ்டம் உங்களைப் பின்தொடர்வது போல் நீங்கள் எப்போதும் உணர்கிறீர்களா?
- நீங்கள் எப்போதும் அறிவு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் திசைதிருப்பப்படுகிறீர்களா?
- வேலை, நிறுவனம் போன்றவற்றில் தொடர்ந்து பணத்தை இழக்கிறீர்களா?
- நீங்கள் எப்போதும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை அனுபவிக்கிறீர்களா?
- வாழ்க்கையில் திருப்தியடையாமல் குடும்பத்தை விட்டு வெளியேற நினைக்கிறீர்களா?
- உங்கள் உறவுகளில் பரஸ்பர புரிதலை ஏற்படுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? நீங்கள் அடிக்கடி தகராறு செய்து சண்டையிடுகிறீர்களா?
சாமி ஆடுதல்
சாமி ஆடுதல் இலகுவான விடயம் அல்ல. சிலர் சாமி ஆடுவதுடன் சேர்ந்து அருள் வாக்கும் சொல்லக்கூடிய தன்மையையும் கொண்டிருப்பர். சிலர் சாமி ஆட மட்டும் செய்வார்கள் அருள் வாக்கு சொல்ல மாட்டார்கள். அதே போல சில பேருக்கு சாமி அல்லது நல்ல சக்தி உடலில் ஏறும் ஆனால் சிலருக்கு தீய ஆவி புகுந்ததினாலும் ஆட தொடங்குவர். நல்ல சக்தியை பெற்றவர்கள் கோயில் உட்பகுதியில் ஆடுவர் வெளியவும் ஆடுவர் ஆனால் கெட்ட சக்தி மூலம் ஆடுவோர் கோவிலை விட்டு வெளியே சென்று ஆடுவார்கள்.
சாமியை வரவழைக்க 4 முறைகள் பின்பற்றப்படுகிறது
சாமியை வரவழைக்க சில வழிகளை கையாளுகின்றனர். அதன் படி வர்ணித்து வரவழைத்தல், உடுக்கை அடித்து வரவழைத்தல், தன்னை அறியாமல் ஆட ஆரம்பித்தல், தீய சக்தியினால் ஆடுதல் போன்றவை ஆகும்.
வர்ணித்து வரவழைத்தல்: குறிப்பிட்ட கடவுளின் நாமத்தை பாடலின் மூலம் பாடி, கடவுளின் புகழை பாடி அதன் மூலம் கடவுளை உள்ளழைத்து சாமி ஆட முடியும்.
உடுக்கை அடித்து வரவழைத்தல்: கடவுளின் பாடல்களை பாடும் பொது அல்லது பாடல்கள் இன்றி உடுக்கையை அடிப்பதன் மூலம் கடவுளின் நாமத்தை பெற்று சாமி ஆடுவதும் ஒரு முறையாகும்.
தன்னை அறியாமல் ஆட ஆரம்பித்தல்: தன்னை அறியாமல் எந்த பாடல் மற்றும் உடுக்கையின் சத்தமுமின்றி தாமாகவே ஆட ஆரம்பித்து அருள்வாக்குகளை கூற செய்வர்.
தீய சக்தியினால் ஆடுதல்: இது சாமி ஆடுதல் என்று எம்மால் கூற முடியாது. ஒருவர் தீய சக்தி உற்புகுந்த அப்புறம் கோவிலினுள் நுழையும் போது அந்த தீய சக்தி தடுக்க முற்படும். அவ்வாறு முற்படும் போது அந்த நபர் கோவிலுக்குள் இருக்க முடியாமல் கோவிலுக்கு வெளியே சென்று ஆட தொடங்குவர். இதுவே தீய சக்தியினால் ஆடுதல் என்று கூறுகின்றனர்.
நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது போன்று இவ்வுலகில் நம்பிக்கை அவநம்பிக்கை என்று இரண்டு பக்கம் உள்ளது. கடவுள் என்னும் சக்தி இந்த உலகில் இருக்கின்றதா இல்லை அப்படி ஒரு சக்தி இல்லை என்பதா என்று எல்லோர்க்கும் ஒரு சந்தேகம் உண்டு. எமது மன நிலை எதை கேட்கின்றதோ அல்லது நம்புகின்றதோ என்பதை பொறுத்தே கடவுள் இருக்கின்றதா இல்லையா என்று முடிவெடுக்க தோணும்.