Tamilwonder.com

உப்பு படிகாரமும் அதன் ஆன்மீக தொடர்புகளும் (Salt and Spiritual Connections)

கனிம வளங்களில் மிகவும் முக்கியமானதும் அதிக பயன்பாடுகள் கொண்ட கனிமங்களில் ஒன்று உப்பாகும். கடல் நீரில் மிக அடர்த்தியாக காணப்படும் உப்பின் தன்மையினை நாம் அன்றாடம் உபயோகிக்கும் உப்பாக உருவாக்கி எமது தேவைக்கு பயன்படுகின்றோம். உப்பினை உருவாக்க பல உப்பளங்களை உருவாக்கி அதன் மூலம் உப்பு நீரினை படியவைத்து கல் உப்பாக மாறியதும் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வுப்பானது வெள்ளை மற்றும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு மற்றும் கறுப்பு கலந்த நிறங்களில் காணப்படும். உப்பின் பயன்பாட்டினையும் தன்மையையும் பொறுத்து அதனை சில வகைகளாக பிரிக்கலாம்.

  • மேசை உப்பு (Table Salt): இவ்வுப்பானது பொதுவாக நம் சமையகளில் மற்றும் பதப்படுத்தல்களுக்கு பயன்படுத்தும் உப்பை குறிக்கின்றது.
  • கோசேர் உப்பு (Kosher Salt): கோசேர் உப்பானது அளவில் பெரியதாகவும் வெளிர் நிறத்திலும் காணப்படும். இதனை அதிகமாக செஃப் () மற்றும் பெரிய ஹோடேல்களிலும் இறைச்சியினை பதப்படுத்துவதட்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
  • கடல் உப்பு (Sea Salt): கடல் உப்பினை ஆவியாக்கி அதிலிருந்து படிந்து வரும் உப்பு கற்கள் கடல் உப்பு என்று அழைக்கப்படுகிறது. இவ்வுப்பில் குறைந்தளவான மினரல்ஸ் மற்றும் சுத்திகரிக்க படாத தன்மையையும், மற்ற உப்புக்களை விட அதன் உப்பு தன்மை (குறைந்த அளவிலான) வேறுபட்டும் காணப்படும்.
  • பிளேக்கி உப்பு (Flakey Salt): இவ்வுப்பானது பளிங்கு போன்று அழகாகவும் சிறியதாகவும் காணப்படும். இந்த உப்பினை சமையல்களில் பின்னர் உணவின் மேல் அலங்கரிப்பதட்காக பயன்படுத்தப்படுகிறது.
  • கல் உப்பு (Rock Salt): இவ்வகையான உப்பானது மற்றைய உப்பினை விட அளவில் பெரியதாக காணப்படும். இதனை மனித பாவனைக்கு உபயோகப்படுத்த முடியாது. இவ்வுப்பானது பாரிய அளவில் உருவாக்கப்படும் ஐஸ் கிரீம், சீஸ் மற்றும் மீன்கள் இறைச்சிகளை பதப்படுத்தும் ஆலைகளில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • ஹிமாலயன் பிங்க் உப்பு (Himalayan Pink Salt): ஹிமாலய உப்பானது சமையலுக்கு அதிகம் பயன்படுத்தா விட்டாலும் இதனை ஆனமீக செயற்பாடுகளுக்காக அதிகம் உபயோகப்படுகிறது.
  • கறுப்பு உப்பு (Black Salt): கறுப்பு உப்பானது தெற்க்காசியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள உப்பாகும். இதன் தன்மை மற்றைய உப்புகளின் காரத் தன்மையினை விட சற்று அதிகமாகவே காணப்படும். இவ்வுப்பினை சமையகளுக்கு மட்டும் தெற்க்காசியாவில் அதிகம் பயன்படுகிறது.

உப்பின் பாவனையை வெறும் சமையல் பாவனைக்குள் மட்டும் கட்டுப்படுத்தி சொல்லிட முடியாது, அதனை தாண்டியும் எமக்குள் ஏற்படும் எதிர்மறை ஆற்றலை கட்டுபடுத்தவும் அதனை அகற்றவும் உப்பின் சக்தி மிகவும் உதவக்கூடியதொன்றாகும். உப்பில் உள்ள மினரல்ஸின் சக்தியாலும் அதன் ஆற்றலாலும் எதிர்மறையான ஆற்றலை அகற்ற முடிகிறது.

பின்வரும் அறிகுறிகள் எமது உடலில் எதிர்மறை ஆற்றல் நம் உடலில் உள்ளதா என்பதை அறிய உதவுகின்றன:

  • உடலு சோர்வு காணப்படும்
  • வேகம் குறைவாக இருக்கும்.
  • மூளையின் செயட்பாடு குறைவாக இருக்கும்.
  • எதிராமரையான சிந்தனைகள் ஏற்படும்.
  • தேவை இன்றி கோவம் ஏற்படும்.
  • மன அழுத்தம் அதிகரித்து காணப்படும்.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எமது உடலில் காணப்படுமாயின் எமது உடலில் எதிர்மறையான ஆற்றல் இருப்பதாக கருதப்படும்.

எதிர்மறை ஆற்றலை அகற்றுவதற்கான வழிமுறை என்ன?

எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் திறன் உப்பு நீர் அல்லது கல் உப்புடன் கலக்கப்பட்ட தண்ணீரில் இயல்பாகவே உள்ளது.

துர்நாற்றம், கொட்டாவி, கால் உணர்வின்மை, காதுகள் மற்றும் கண்களில் வெப்பம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இது எதிர்மறை ஆற்றலின் வெளிப்பாடாகும். இவ்வாறான மாற்றங்களை உணரும் பட்சத்தில் உப்பு கலந்த நீரில் தலை முழுகுவதன் மூலம் இத்தாக்கத்தினை குறைத்துக்கொள்ள முடியும் அல்லது இல்லாமல் ஆகவும் முடியும்.

வீட்டின் உள்ளே உப்பு கலந்த நீரினை தெளித்தல் மற்றும் வீட்டின் வெளியே உப்பு கற்களை எறிதல் போன்ற செயட்பாடுகள் மூலம் எதிர்மறை தாக்கங்களை தடுக்க அல்லது இல்லாமலாக்க முடியும்.

உப்பின் ஆன்மீக நன்மைகள்

உப்பு மிகவும் கனிமத்தன்மை நிறைந்த பொருளாகும். பல ஆண்டுகளாக மதம், ஆன்மீகம் மற்றும் மருத்துவ பல்வேறு நடைமுறைகளுடன் உப்பு இணைக்கப்பட்டுள்ளது. சோடியம் குளோரைடு அல்லது உப்பு உடலின் அனைத்து செயல்முறைகளுக்கும் இன்றியமையாத ஒரு கனிமமாகும். இது உடலின் தசைகளை சுருக்கவும், திரவ சமநிலையை பராமரிக்கவும், நரம்புகளின் செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது.

பண்டைய நாகரிகங்களில் தூய்மை, பாதுகாத்தல் மற்றும் அழியாத தன்மை போன்ற பண்புகளைக்கொண்டதாக உப்பு காணப்படுகிறது. உப்பு மனித உயிர்களுக்கு இன்றியமையாதது மற்றும் உயிர்வாழும் குணங்களைக் கொண்டிருப்பதால் உப்பு தனி சிறப்புமிக்கதாக கூறப்படுகிறது. அனைத்து மத கலாச்சாரங்களிலும் உப்புக்கான மதிப்பு உள்ளது, நமது உடலுக்கும் ஆன்மீக மற்றும் மனோதத்துவ தாக்கங்களுக்கும் ஊட்டச்சத்தை வழங்குவதில் உப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

உப்புகள் ஆன்மீக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவை எல்லாவற்றிலும் முக்கியமானது ஹிமாலயன் உப்பாகும். அதன் அதிக தாது மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தின் காரணமாக எதிர்மறை ஆற்றலை சமநிலைப்படுத்தும். ஹிமாலய உப்பினை குளிக்கும் நீரினில் சேர்க்கும் போது மெக்னீசியம் மற்றும் சல்பேட்டின் கலவையான எப்சம் உப்பு, எமக்கு ஏற்படும் பதற்றத்தை தணித்து மன அமைதியை உருவாக்கும் ஆற்றல் ஹிமாலய உப்பில் காணப்படும். மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட மினரல்ஸ் நிறைந்திருப்பதால் உப்பு, நச்சுத்தன்மை நீக்கும் பண்புகள் அதிகம் கொண்டதாக காணப்படுகின்றது.

உப்பு என்பது பல்வேறு வகையான மத சடங்குகள் மற்றும் கலாச்சார சூழல்களில் ஆன்மீக பிணைப்பைப் பாதுகாத்தல், கெட்ட ஆற்றல்கள் மற்றும் தீய ஆவிகளை விரட்டுவதில் உப்பின் முக்கியத்துவம் பெரிதாக காணப்படுகின்றது. இது ஆன்மா, உடல் மற்றும் உடலின் ஊட்டச்சத்தை பிரதிபலிப்பதால் உயிர்வாழும் பண்புகளுடனான அதன் உறவு ஆன்மீகக் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறது. ஆன்மீக சமூகத்தில் அதன் மதிப்புமிக்க இடத்தை உப்பு மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஹிமாலய உப்பின் நோயினை குணப்படுத்தும் ஆற்றல் காரணமாக இளஞ்சிவப்பு ஹிமாலய உப்புக்கல் விளக்குகள் பிரபல்யமடைந்து காணப்படுகிறது. எதிர்மறை ஆற்றலை சமநிலைப்படுத்தும் மினரல்ஸ்களை இவ்விளக்கானது வெளியிடுவதன் மூலம் இந்த விளக்குகள் வீட்டின் உற்புற காற்றில் மினல்ஸ்களை கலப்பதன் மூலம் அமைதியான மற்றும் உற்சகமான சூழ்நிலையை உருவாக்குகின்றது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த உப்புக்கல் விளக்குகளின் சூடான, அமைதியான பிரகாசம் மனதுக்கு ஆறுதலை அளிக்கிறது. 

உப்பின் சிறப்பு பல மதங்களில் மதிக்கப்படுகிறது மற்றும் உலகம் முழுவதும் ஆன்மீக சடங்குகளை மேற்கொள்ள உப்பு பயன்படுகிறது. புனித நீர் ஆசீர்வாதம் போன்ற கிறிஸ்தவ விழாக்களில் இது பாதுகாப்பு மற்றும் தூய்மையைக் குறிக்கும் வகையில் நீருடன் கலந்து தெளிக்கப்படுகிறது. உப்பு, பெரும்பாலும் இந்து மதத்தில் “லாவணா” என்று குறிப்பிடப்படுகிறது. இது விழாக்களில் அவசியமான ஒரு அங்கமாகும்.

ஹிமாலயா உப்பு

இமயமலை உப்புக்கல் விளக்கு என்பது ஆசியாவில் உள்ள இமயமலையில் இருந்து வரும் உப்பு பாறையின் படிகமாகும். இந்த விளக்குகள் இளஞ்சிவப்பு இமாலயன் உப்புத்துண்டுகளால் ஆனது. வீட்டின் உட்புற அழகின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கும் காற்றை நடுநிலையாக்குவதட்கும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உப்பில் காணப்படும் சோடியம் என்பது முக்கியமான மூலக்கூறாகும், அத்துடன் உடலில் நடைபெறும் பல்வேறுபட்ட செயட்பாடுகளுக்கு சோடியம் உதவுகின்றது.

ஹிமாலயா உப்புக்கல் விளக்கின்  பயன்பாடு

  • உப்பு விளக்கு காற்றை சுத்தப்படுத்துகிறது மற்றும் வாசனை நீக்குகிறது: இமயமலை உப்புக்கல் விளக்குகள் தூசி மற்றும் காற்றில் உள்ள மாசுக்களைப் அகற்றும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளன. அவை இயற்கையான காற்றைச் சுத்தப்படுத்தும். ஹைக்ரோஸ்கோபி சுற்றியுள்ள சூழலில் இருந்து நீர் மூலக்கூறுகளை இழுத்து உப்புக்கற்களுக்குள் உறிஞ்சி காற்றை வடிகட்டுகிறது.
  • இருமலை எளிதாக்குகிறது: காற்றிலுள்ள மாசுக்களை இவ்வுப்புகல் உறிஞ்சி எடுப்பதன் மூலன் எமக்கு ஏற்படும் இருமலை குறைகின்றது.
  • ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்கவும்: அதிக நேரம் வசிக்கும் இடங்களில் காற்றில் இருந்து தூசி, பூஞ்சை போன்ற சிறிய துகள்களை அகற்றுவதன் மூலம் ஹிமாலயன் உப்பு விளக்குகள் ஒவ்வாமை பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றன. ஆஸ்துமா நோய் உடையவர்கள் இவ்விலக்கினை பயன்படுத்துவது நல்லது, இவ்விளக்கு எரியும் பொது காற்றிலிருந்து மாசுக்கள் நீங்கி சுவாசிக்கும் திறனை சீராக நடைபெற ஹிமாலய விளக்குகள் உதவுகின்றன.
  • மனநிலையை மேம்படுத்தவும்: நாள் முடிவின் ஓய்வு நேரத்தில் ஹிமாலய விளக்குகள் இயற்கையாக உங்கள் மனநிலையை மாற்ற உதவும் ஒரு அற்புதமான முறையாகும். ஹிமாலய விளக்குகள் சில சமயங்களில் கவனத்தை சிதற விடாமல் கவனத்தை மேம்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கி தரக்கூடியது. இது மகிழ்ச்சியான உணர்வை தருவதோடு மட்டுமில்லாமல் மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை சீராக்கவும் உதவுகின்றன.
  • சிறந்த தூக்கம்: சுற்றியுள்ள காற்றினை சுத்தப்படுவதால் எளிதான சுவாசத்தையும் சிறந்த மனநிலையும் உருவாக்கி சிறந்த தூக்கத்தை பெற இவ்விலக்கானது பெரிதும் உதவுகிறது.

மனிதனின் வாழ்வியலுக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு கனிமம் உப்பு ஆகும். உணவிலும் சரி ஆன்மீகத்திலும் சரி நாம் உப்பினை பயன்படுத்துவது அவசியமாகும். உடலின் சீரான செயற்பாட்டிற்கும் உளவியல் செயற்பாட்டிற்கும் உப்பின் பங்கு ரொம்ப முக்கியமானதாகும். பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும் கனிமமாக உப்பு விளங்குகின்றது. உப்பின் முக்கியத்துவம் எக்காலத்திலும் தவிர்க்க முடியாததொன்றாகும்.

tamilwonder.com

Follow us

Tamil Wonder is a spiritual blog exploring the depths of Tamil culture, traditions, and religious practices with insightful content.