தலைவலி என்பது பலர் அன்றாடம் சமாளிக்கும் ஒரு பொதுவான நிலை. அசௌகரியம் முதல் முற்றிலும் தாங்க முடியாதது அளவு வழியை ஏற்படுத்தும், அவை எமது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும். பல வகையான தலைவலிகள் உள்ளன, பதற்றத்தில் வரும் தலைவலி மிகவும் பொதுவானது. கிளஸ்டர் தலைவலிகள் (Cluster headaches) வலிமிகுந்தவை அதே சமயம் ஒற்றைத் தலைவலியும் கடுமையான தலைவலி ஆகும். தலைவலி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பல மருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்றாலும், பல பயனுள்ள இயற்கை சிகிச்சைகளும் உள்ளன.
தலை வலியை ஏற்படுத்தக்கூடிய வழிகள்
- சரியான தூக்கமின்மை
- நீரிழப்பு
- அதிகளவில் கோப்பி அருந்துதல்
- மது அருந்துதல்
- ஊட்டச்சத்து குறைபாடு
- உணவு குறைபாடு
- மிக அதிக இரத்த அழுத்தம்
- மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டம் காரணமாக ஏற்படும்
தலைவலியை போக்கக்கூடிய இயற்கை வழிமுறைகள்
நீர்: தேவையான அளவு நீர் அருந்துதல் முக்கியமானதாகும். அதிகளவிலான நீரினை பருகும் பொது நீரிழப்பு போன்ற நோய்களை தவிர்க்க முடியும். நீரிழப்பினை தடுப்பதன் மூலம் தலை வலி ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
சில சந்தர்ப்பங்களில், தலைவலிக்கு உடல் ரீதியான காரணம் உள்ளது. தலையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் எதையும் தவிர்த்தல் வேண்டும். கூந்தலை இறுக்கமாக கட்டுவது அல்லது தலைக்கவசத்தை இறுக்கமாக அல்லது நீண்ட நேரம் அணிதல் என்பவற்றை தவிர்த்தல் நல்லது.
சரியான நேரத்தில் சரியான உணவு: சரியான உணவு உட்கொள்ளவில்லை என்றால், இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக தலைவலி ஏற்படலாம். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மற்றும் போதுமான உணவை உட்கொள்வது பொதுவாக தலைவலிக்கு போக்க உதவும். உதாரணமாக, மெக்னீசியம் கனிமத்தில் நிறைந்த பாதாம், கருப்பு பீன்ஸ் மற்றும் கீரை போன்ற உணவுகள் தலைவலியைப் போக்க உதவியாக இருக்கும்.
மதுபானங்களை தவிர்த்தல்: உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானங்களை முற்றாக கைவிடுதல் தலைவலியை போக்க சிறந்த வழியாகும். அதற்கு பதிலாக இயற்கை முறையில் பெறப்படும் கள்ளு அல்லது பனங்கள்ளு போன்றவற்றை பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.